|  
  தமிழில் 
 இசைப் பாடல்கள் இல்லை என்று சொல்வோரின் வாயை
 அடைக்கும் வகையில் பாரதிதாசன், தமிழ் இசைப் 
 பாடல்கள்
 பலவற்றைப் படைத்துள்ளார். அந்தப் பாடல்கள் 
 வழியாகச்
 சிறுவர்களுக்கு நல்ல பழக்க வழக்கங்களை எடுத்து உரைத்துள்ளார்.
 பெண் கல்வி பெண் விடுதலை முதலிய பெண்கள் முன்னேற்றக்
 கருத்துகளை இசைப் பாடல்களின் வழியாக வழங்கியுள்ளார்.
 தமிழ்மொழியின் பெருமையையும் தமிழ்த் தொண்டு செய்ய
 வேண்டிய தேவையையும் பாரதிதாசன் இசைப் பாடல்களின்
 வழியாக இளைஞர்களுக்கு விளக்கியுள்ளார். இசைப்பாடல்களில்
 காதல் சுவையைக் கலந்து நமக்குப் பாவேந்தர் தந்துள்ளார்.
 அவற்றில் காணப்படும் உவமை நயம் ஒவ்வொன்றும் 
 நம்மை
 நினைத்து நினைத்து இன்பம் அடையச் செய்யும். 
  
  |