இல்லறத்தில் மகளிர் பெறுமிடம்,
மக்கள் செல்வத்தின்
பெருமை ஆகியவை பற்றிய செய்திகள் இந்தப் பாடத்தின்
முதலில் கூறப்படுகின்றன.
கல்வி, செல்வம், நட்பு,
இனிய
சொற்கள் ஆகியவை எவ்வாறு ஒரு மனிதனுக்குச் சிறப்புத்
தருவனவாக அமைகின்றன என்பது
அடுத்துச்
சொல்லப்படுகிறது.
அரசருக்கு உரிய சிறப்பு இயல்புகள்
எவை, கற்றவருக்கு உரிய சிறப்பு இயல்புகள்
எவை,
மக்களது சிறப்பு இயல்புகள் எவை, என்பவை
பற்றிய
செய்திகள் எடுத்துரைக்கப்படுகின்றன.
இறுதியாக, வாழ்வியல் உண்மைகளாக, ஒவ்வொருவரும் பின்பற்றக்
கூடியதாக அமைந்தவை, பின்பற்றக் கூடாத வகையில்
அமைந்துள்ளவை ஆகியவை பற்றிய செய்திகள்
சொல்லப்படுகின்றன.
|