3.0 பாட முன்னுரை சுவரை வைத்துத்தான் சித்திரம் வரைய வேண்டும் என்பது பழமொழி. சுவர் இடிந்து போனால் அதன் மேலே உள்ள சித்திரமும் அழிந்து போகும். அதுபோல் உடல் நலிந்தால் வாழ்க்கையே சிதைந்து போகும். அதனால் இவ்வுலகில் எச்செயலையும் செய்து முடிக்க உடல் நலத்தைப் பேணிப் பாதுகாப்பது இன்றியமையாதது. உடம்பின் சார்பில்தான் உயிர் நிற்கிறது. உடம்பு அழியும் போது உயிரும் அழிந்து போகிறது. இதனால் தான் திருமூலரும்,
என்றும்,
என்றும் கூறுகிறார். உடலை வருத்தும் நோயை வராமல் செய்வதுதான் மருந்து.
என்கிறார் திருமூலர். உடம்பினை அழியாது வைத்து இயங்கச் செய்யும் மருந்து முறையே வைத்தியம் எனப்பெறும். இந்த வைத்தியத்தை இறைவன் திருவருளால் கண்டறிந்தவர்கள் சித்தர்கள். இதனால் இது சித்த வைத்தியம் எனப் பெயர் பெறும். சித்த வைத்தியத்தில் எளிய மக்களும் நல்வாழ்வு பெற்று உய்வதற்காக அதிகச் செலவில்லாமல் மிகுந்த பயன் விளைவிக்கும் மருந்துகள் கூறப்பெற்றுள்ளன. சித்தர் மருந்துகள் பல உள்ளன. அவை தம்முள் சிறந்தனவாகத் திரிகடுகம், சிறுபஞ்சமூலம், ஏலாதி என்பனவற்றைக் குறிப்பிடலாம். உடல் நோயைத் தீர்க்கும் மருந்துகளைப்
போல உள நோயைத் தீர்க்கும் மருந்துகள் நல்லொழுக்க முறைகளே. அவற்றைத் தொகுத்துத்
திரிகடுகம், சிறுபஞ்சமூலம், ஏலாதி என்று உடல் நோய் மருந்துப் பெயர்களையே
இட்டு உளநோய் மருந்து நூல்களைப் பாடியிருக்கின்றனர் மூன்று புலவர்கள். கீழ்க்கணக்கு
நூல்கள் பதினெட்டைக் குறிக்கும் கீழ்க்காணும் பாடல்.
கடுகம், திரிகடுகத்தையும், மாமூலம் சிறுபஞ்சமூலத்தையும் குறிக்கிறது. ஏலாதி, ஏலாதி என்றே குறிக்கப்பட்டுள்ளது. மருந்துப் பெயர் கொண்ட திரிகடுகம், சிறுபஞ்சமூலம், ஏலாதி என்ற இம்மூன்று நூல்களும் மூன்றாவது பாடமாக வருகின்றன. இப்பாடம் மூன்று பகுதிகளாக உள்ளது. முதல் பகுதியில் திரிகடுகம் பற்றியும், இரண்டாவது பகுதியில் சிறுபஞ்சமூலம் பற்றியும், மூன்றாவது பகுதியில் ஏலாதி பற்றியும் பார்க்கலாம். இனி முதற்பகுதியான திரிகடுகம் பற்றிப் பார்ப்போமா? |