அறத்தின் சிறப்பைப் பற்றியும் உயர்வைப் பற்றியும் திரிகடுகம் கூறும்
கருத்துகள் இந்தப் பாடத்தில் இடம் பெற்றுள்ளன. திரிகடுகம் கூறும் நல்ல
குடும்பத்தின் பண்புகள், கல்வியின் பயன் ஆகியவையும் விளக்கப்படுகின்றன.
சிறுபஞ்சமூலம் கூறும் அறக்கருத்துகள் குறிப்பாக வாழ்வியல் உண்மைகள்
பற்றி இந்தப் பாடத்தில் கூறப்படுகின்றன.
தாய்மையின் சிறப்பு, உணவு
கொடுப்பதின் பயன், வீடுபேறு அடைதல் ஆகியவை பற்றி ஏலாதியில் இடம் பெற்றுள்ள
செய்திகள் இந்தப் பாடத்தில் தொகுத்துக் கூறப்பட்டுள்ளன.
|