ஒருவன் தன் வாழ்க்கையில் பின்பற்ற வேண்டிய
நெறிகளும், கற்றுக்கொள்ள வேண்டிய நெறிகளும் பல உள்ளன. அவற்றைப்போல, விலக்கக்கூடியவைகளும்
பல உள்ளன. அவை பற்றி ஆசாரக்கோவை கூறும் செய்திகள் இந்தப் பாடத்தில் கூறப்படுகின்றன.
இந்த உலகத்தில் பல கூறுகள் சிறப்புடையனவாகத் திகழ்கின்றன. சில கூறுகள்
சிறப்பு இல்லாதவைகளாகக் காணப்படுகின்றன. அவை
பற்றி முதுமொழிக் காஞ்சி கூறும் கருத்துகள் இந்தப் பாடத்தில் தொகுத்துக்
கூறப்பட்டுள்ளன. |