இலக்கியங்களில் பழமொழிகள்
எவ்வாறு பயன்படுத்தப்படுகின்றன, பழமொழிகளின் அமைப்பு எவ்வாறுள்ளது,
அவற்றின் சிறப்பு எது என்பவை இந்தப் பாடத்தில் முதலில் கூறப்படுகின்றன.
கல்வியின் பெருமை, கற்றோரின் சிறப்பு,
கல்லாதாரின் இழிவு ஆகியவையும் இல்வாழ்க்கைக்குரிய
நெறிகளாகப் பழமொழிகள் கூறுவனவும் அடுத்துக் கூறப்படுகின்றன.
அரசனின் இயல்பு, அமைச்சரின் துணை,
பகைத்திறம் பார்த்தல், படைவீரர் ஆகியவை பற்றிப்
பழமொழிகளில் இடம் பெற்றுள்ள செய்திகள் எடுத்துரைக்கப்பட்டுள்ளன.
முயற்சியினால் கிடைக்கும் வெற்றியும்,
நட்பினால் பெறக்கூடிய நன்மைகளும் பழமொழிகளின்
வாயிலாக எவ்வாறு வெளியிடப்படுகின்றன என்பதும் இப்பாடத்தில் தொகுத்துக் கூறப்பட்டுள்ளது.
|