பாடம் - 4
C01224  வெற்றிவேற்கையும் உலகநீதியும்
E
இந்தப் பாடம் என்ன சொல்கிறது?

பிற்கால அறநூல்களில் வெற்றிவேற்கையும் உலகநீதியும் தெரிவிக்கும் அறக்கருத்துகளை இந்தப் பாடம் தெரிவிக்கிறது. கல்வியின் பெருமை, கல்லாமையின் இழிவு, கற்றவர் சிறப்பு, உதவிசெய்து வாழ்வதால் ஏற்படும் நன்மைகள், நல்லவர்களின் நல்ல குணங்கள், பெரியோர் நட்பின் பெருமை, சிறியோர் நட்பின் இழிவு, சொல்திறம் முதலியவற்றை விளக்குகின்றது. உலகநீதி, அறநூல் என்றாலும், முருகன், வள்ளி ஆகியோர் பெருமையையும் தெரிவிக்கிறது.


இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?

  • வெற்றி வேற்கை என்னும் அறநூலின் வேறுபெயர் நறுந்தொகை என்பதையும், இதை அதிவீரராம பாண்டியன் என்னும் மன்னர் இயற்றியுள்ளார் என்பதையும் அறியலாம்.

  • எப்படிக் கல்வி கற்க வேண்டும் என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.

  • எந்தக் குடியில் பிறந்தவராக இருந்தாலும், கற்றவரே உயர்ந்தவராகக் கருதப்படுவார் என்ற உண்மையைத் தெரிந்து கொள்ள முடியும்.

  • கல்வி அறிவு இல்லாதவனுக்கு அவன் பிறந்த குலத்தால் பெருமை வருவதில்லை என அறிந்துகொள்ளலாம்.

  • செல்வம் இருப்பவர்கள், செல்வம் இல்லாதவர்களுக்கு உதவி செய்வதைக் கடமையாகக் கொள்ள வேண்டும் என்ற கருத்தை உணரலாம்.

  • உலகநீதி என்னும் அறநூல் தெரிவிக்கும் அறக்கருத்துகளை அறிந்து கொள்ளமுடியும்.

[பாட அமைப்பு]