சிற்றிலக்கியம் தமிழ் இலக்கிய
வகைகளுள் ஒன்று என்று இந்தப் பாடம் விளக்குகிறது, சிற்றிலக்கியம்
என்றால் என்ன என்பதை விளக்கி அதன் வகைகளைக் கூறுகிறது. சிற்றிலக்கியப்
பாகுபாடுகள் அமையும் பல்வேறு அடிப்படைகளை எடுத்துரைக்கிறது.
சிற்றிலக்கியத் தோற்றத்திற்கான காரணங்களை அரசியல், சமூக, சமயச்
சூழல் வழியில் விளக்க முற்படுகிறது. சிற்றிலக்கியங்களின் பொதுவான
சிறப்புகளை சுட்டிக் காட்டுகிறது.
|