சிற்றிலக்கிய
வகைகளுள் ஒன்றான தூது இலக்கியத்தின்
இலக்கணம்,
தோற்றம் ஆகியவற்றை விளக்குகிறது. தூது
இலக்கியக் கூறுகள் தொல்காப்பியத்திலும் பிற இலக்கியங்களிலும் இடம்
பெற்றுள்ளதைக் குறிப்பிடுகிறது. தூது நூல்கள்
பல
தோன்றியுள்ளதைக் குறிப்பிட்டு அழகர் கிள்ளை விடு
தூதைப் பற்றி விரிவாகப் பேசுகிறது. அழகர் கிள்ளை விடு
தூதின் அமைப்பு, தலைவனாகிய திருமாலின் பெருமை,
தலைவனைக் கண்ட தலைவியின் நிலை, தூது செல்லும்
கிளியின் பெருமை, சில புராணக் கதைகள் ஆகிய
அனைத்தையும் விரிவாக விளக்குகிறது. |