3.6 சிங்கனின்
வருகை
குறத்தி வசந்த வல்லிக்குக் குறி கூறிப் பரிசுகள் பெறுகின்றாள்.
அப்போது சிங்கன் என்பவன் தன் மனைவி ஆகிய சிங்கியைத்
தேடி வருகின்றான். சிங்கன் என்பவன் குறத்தியின் கணவன்
ஆவான்.
சிங்கியைத் தேடி வரும் சிங்கனைப் பற்றி ஆசிரியர்,
மா மாலைப் பூண்ட சிங்கன்
வங்கணச்
சிங்கியைத் தேடி
வருகின்றானே
(பாடல் 80: 4) |
(மா = மிகுந்த; மாலை = மயக்கம்; வங்கணம்
= அன்பு)
என்கிறார்.
சிங்கியாகிய தன் மனைவியைக் காணாது
மிகுந்த மயக்கம்
கொண்ட சிங்கன் தன் அன்பு மனைவியைத்
தேடி வருகின்றான் என்று புலவர் கூறுகின்றார்.
3.6.1 சிங்கனும் பறவைகளும்

|
மனைவியைத் தேடிவரும் சிங்கன் தன் நண்பன்
ஆகிய நூவன் என்பவனைச் சந்திக்கின்றான். சிங்கன்
மரத்தில் ஏறிப் பறவைகளைப் பார்க்கின்றான்.
பின்னர், பறவைகளின் வடிவைக் கூறுகின்றான். இந்த
இடத்தில் பல்வேறு
பறவைகளின் பெயர்கள்
கூறப்படுகின்றன. இது புலவரின் உயிரியல் அறிவைக் காட்டுகின்றது
எனலாம். எந்த எந்தப் பறவைகளைச்
சிங்கன் கூறுகின்றான் என்று
பார்ப்போமா? |
நாரை, அன்னம், தாரா, கூழைக்கடா, செங்கால்
நாரை, காடை,
சம்பங் கோழி, காக்கை, கொண்டைக்
குலாத்தி, மாடப்புறா, மயில்,
கொக்கு, வெள்ளைப் புறா,
செம்போத்து, ஆந்தை, மீன் கொத்திப்
பறவை, மரம் கொத்திப் பறவை என்பன சுட்டப்படுகின்றன.
(பாடல். 89)
3.6.2 சிங்கனும் துயரமும்
சிங்கன் தன் மனைவியாகிய சிங்கியைப்
பிரிந்த பிரிவால்
வருந்திக் கூறுகின்றான்.
கள் உலவு கொன்றை
அம்தார்க் கர்த்தர் திரிகூடவெற்பில்
பிள்ளை மதி வாள் நுதலாள் பேசாத வீறு அடங்கத்
துள்ளி மடிமேல் இருந்து
தோளின் மேல் ஏறி அவள்
கிள்ளை மொழி கேட்க ஒரு
கிள்ளையானேன் இலையே
(பாடல். 98) |
என்று வருந்திக் கூறுகிறான்.
(கள் = தேன்; கர்த்தர் = தலைவர்; வெற்பு
= மலை; பிள்ளைமதி
= இளம் பிறை; வாள்
= ஒளிபொருந்திய; வீறு = சிறப்பு; கிள்ளை
= கிளி)
கொன்றை மாலை அணிந்த தலைவர் திரிகூடநாதர். அவர்
மலை திரிகூட மலை. அம்மலையில்
வாழ்கின்றவள் சிங்கி. அவள்
பேச்சுக் கிளியின்
பேச்சைப் போன்று இருக்கும். அவள் தோள்
மேல் ஏறி அவளுடைய கிளிப் பேச்சைக் கேட்க நான் ஒரு
கிளியாகக்கூடப் பிறக்கவில்லையே என்று சிங்கன் வருந்திக்
கூறுகின்றான்.
• மனைவியைத் தேடுதல்
பல இடங்களில் தேடியும் சிங்கன்
சிங்கியைக் கண்டுபிடிக்க
வில்லை. இதனால் மனம் வருந்துகின்றான். சான்றாக ஒரு
பாடலைப் பார்ப்போமா?
பேடைக் குயிலுக்குக்
கண்ணியை வைத்து நான்
மாடப்
புறாவுக்குப் போனேன்
மாடப் புறாவும் குயிலும்
படுத்தேன்
வேடிக்கைச்
சிங்கியைக் காணேன்
(பாடல் 112:1) |
என்கிறான் சிங்கன்.
(பேடை = பெட்டை; படுத்தேன் =
பிடித்தேன்; வேடிக்கை =
வேடிக்கைக் காரியான)
பெண் குயிலைப் பிடிக்க நான் கண்ணியை வைத்தேன். வைத்துவிட்டு
மாடப் புறாவைப் பிடிக்கப்
போனேன். குயிலையும் மாடப் புறாவையும் பிடித்தேன்.
ஆனால் வேடிக்கைக் காரியான என் சிங்கியைக் காணாதவன் ஆனேன் என்று சிங்கன் வருந்துகிறான்.
• சிங்கியின் அடையாளம்
சிங்கன் சிங்கியைக் காணாது வருந்துகிறான். இதைக் கண்ட நூவன் சிங்கனிடம் சிங்கியின் அடையாளம் யாது எனக் கேட்கிறான். அதற்குச் சிங்கன் சிங்கியின் அடையாளத்தைக் கூறுகிறான்.
கறுப்பில் அழகி அடா!
என் சிங்கி கறுப்பில் அழகி அடா
(பாடல் 116:1) |
எனத் தொடங்கிப் பல்வேறு அடையாளங்களைக்
கூறுகின்றான்.
3.6.3 சிங்கனும் சிங்கியும்
பல இடங்களிலும் தன் மனைவி சிங்கியைத்
தேடித் திரிகிறான்
சிங்கன். இறுதியில் திருக்குற்றால நகரில் உள்ள தெருவில் தன்
மனைவியைக்
காண்கிறான்.
அதைப் புலவர்,
ஆண் ஆகிப் பெண் விரகம் ஆற்றாமல் போன சிங்கன்
பூண் நாகப் பாம்பு அணிவார் பொன் நகர்சூழ்
நன்னகரின்
சேண் ஆர் பெரும் தெருவில் சிங்கியைமுன்
தேடிவைத்துக்
காணாமல் போன பொருள் கண்டவர்போல் கண்டானே (பாடல் 121) |
 |
என்று கூறுகின்றார்.
(விரகம் = ஆசை; ஆற்றாமல் =
தாங்கமுடியாமல்;
பூண் =
அணிகலன்;சேண் = நெடிய (பெருமை) ஆர் =
பொருந்திய)
சிங்கன் ஆண் தன்மை உடையவன். பெண் ஆசை
தாங்கமுடியாத நிலையை உடையவன். பாம்பை அணிகலனாக
அணிந்தவர் சிவபெருமான். அவர் நகரம் திருக்குற்றாலம். அந்த
நகரின் அழகிய தெருவில் சிங்கியைச் சிங்கன் கண்டான். இது,
காணாமல் தொலைந்து போன பொருளை மீண்டும் கண்டவர்
போலக் கண்டான் என்று உவமை நயம்படக் கூறப்படுகிறது.
• சிங்கனின் மகிழ்ச்சி
சிங்கன் தன் மனைவி சிங்கியைக் கண்டதும்
மிகவும் மகிழ்ச்சி
அடைகின்றான். சிங்கன் மகிழ்ச்சி
அடைந்ததைக் காட்டும் பாடல்
இதோ.
தொண்டாடும்
சுந்தரர்க்குத் தோழர் திரிகூட வெற்பில்
திண்டாடி நின்ற சிங்கன்
சீராடும் சிங்கிதனைக்
கண்டு ஆடித் துள்ளாடிக் கள்
ஆடும்தும்பியைப் போல்
கொண்டாடிக் கொண்டாடிக்
கூத்து ஆடிக்கொண்டானே
(பாடல் 124) |
 |
(தொண்டாடும் = தொண்டு புரிந்த; திண்டாடி
நின்ற = தவித்து
நின்ற; துள்ளாடி =
துள்ளிக் குதித்து; கள் = தேன்; ஆடும்
=
ஆடுகின்ற; தும்பி = வண்டு; கொண்டாடி
= பாராட்டி)
திரிகூடமலை, இது திருக்குற்றால நாதருடைய மலை.
திருக்குற்றால நாதர் தேவாரம் பாடித் தொண்டு
புரிந்த சுந்தரரின்
நண்பர். இத்தகைய திரிகூட நாதரின் திருக்குற்றால மலையில்
சிங்கன் சிங்கியைக்
காண்கிறான். கண்டு மகிழ்கின்றான். அவன்
மகிழ்ச்சி
எப்படி உள்ளது. தேனை உண்டு மயக்கம் கொண்ட
வண்டைப்
போல் சிங்கியைப் பாராட்டிக் கூத்து ஆடுகின்றான். |