குறவஞ்சி
இலக்கியத்தின் பொதுவான இலக்கணமும் அது
பெயர் பெறும்
முறையும் விளக்கப்படுகின்றன. குறவஞ்சியின்
தோற்றத்திற்கான கூறுகள் பழந்தமிழ் இலக்கியங்களில்
இடம் பெற்றிருப்பதைச் சுட்டிக் காட்டுகிறது.
இப்பாடத்தில்
திருக்குற்றாலக் குறவஞ்சி பற்றி விரிவாக
விளக்கப்படுகிறது.
திருக்குற்றாலக்
குறவஞ்சியின் அமைப்பு, பொருள்,
தலைவனாகிய
குற்றாலநாதரின் சிறப்பு, உலாவைக் காணும்
பெண்கள்
நிலை, தலைவியாகிய வசந்தவல்லியின் நிலை,
அனைத்தையும் விளக்கமாகக் குறிப்பிடுகிறது.
குற்றாலக்
குறவஞ்சியில் இடம்பெறும் குறத்தியின் சிறப்பு, அவள்
நாட்டு வளம், நகர்வளம், குறத்தி வசந்தவல்லிக்குக் குறி
கூறல், சிங்கன், சிங்கி பற்றிய செய்திகள் இப்பாடத்தில்
இடம் பெறுகின்றன. |