தலைவி மற்ற பெண்களைப் பார்த்துத் தனக்கு உற்றதைக்
கூறுகின்றாள். இதோ அந்தப்
பாடல்அடிகள்.
ஏரார் இளமுலையீர்! என்தனக்கு
உற்றதுதான்
காரார் குழலெடுத்துக் கட்டி - கதிர்
முலையை
வாரார வீக்கி மணிமேகலை திருத்தி
ஆரார் அயில்வேல்கண் அஞ்சனத்தின் நீறணிந்து
சீரார் செழும்பந்து கொண்டடியா நின்றேன் நான்
(அடிகள் 17-21) |
 |
என்று தலைவி கூறுகின்றாள்.
(ஏர் = அழகு; உற்றது = நிகழ்ந்தது; கார்
= கரிய; குழல் =
கூந்தல்; வார் =
கச்சு; வீக்கி = கட்டி; மணிமேகலை =
ஓர்
அணிகலன்; அஞ்சனம் = மை; செழும் பந்து
= அழகிய பந்து)
 |
பெண்களே! நான் கரிய கூந்தலில்
முடித்தேன். வார் என்ற ஆடை
வகையால் என் மார்புகளை இறுக்கிக்
கட்டினேன். மணிமேகலை என்ற
அணிகலனை அணிந்தேன். கண்களில்
மை தீட்டினேன். இவ்வாறு
என்னை
அழகு படுத்திக் கொண்டு நான் பந்து
விளையாடிக் கொண்டிருந்தேன். அப்போது திருமால்
குடக் கூத்து ஆடினான். இதை,
|
நீரார் கமலம்போல் செங்கண்மால் என்றொருவன்
பாரோர்கள் எல்லாம் மகிழப் பறைகறங்க
சீரார் குடமிரண்டு ஏந்திச் செழுந்தெருவே
ஆரார் எனச்சொல்லி ஆடும் . . . . .
(அடிகள் 22-25) |
 |
(நீர்ஆர் =
நீர்நிலையில் உள்ள; கமலம்
= தாமரை; செங்கண் =
சிவந்த கண்களை உடைய; பறை
= முரசு; கறங்க = ஒலிக்க)
என்று திருமங்கை ஆழ்வார் குறிப்பிடுகிறார்.
நான் பந்து விளையாடிக் கொண்டிருந்தேன். அப்போது
செந்தாமரை மலர் போன்ற சிவந்த கண்களை உடைய
திருமால்
வந்தான். எப்படி வந்தான்? பறை ஒலிக்க, இரண்டு குடங்களைக்
கையில் ஏந்தி ஆடிக்கொண்டு வந்தான்.
அவ்வாறு ஆடும்போது
''பெண்களே உங்கள் பெண்மையைக் காத்துக் கொள்ளுங்கள்"
என்று ஆடிக்கொண்டு வந்தான் என்று தலைவி கூறுகிறாள்.
இவ்வாறு திருமால் குடக்கூத்து ஆடிக்கொண்டு
வருவதைப்
பார்த்த தாய்மார்களும் மற்றவர்களும் என்னை அழைத்தனர்.
எனவே நானும் ஆங்குச் சென்றேன் என்று தலைவி
கூறுகின்றாள்.
5.3.1 தலைவியின் மயக்கம்
தலைவியின் மயக்கத்தைக் கண்டு அவளுடைய தாய்மார்கள்
வருந்தினர்.
இந்த மயக்கம் நீங்கப் பாகவதர்களின் திரு அடித்
தூசியைக் காப்பாக இட்டனர். சிவந்த
குறிஞ்சி மலரால் ஆன
மாலையைச் சாத்தன் என்ற பெண் தெய்வத்திற்கு அணிவித்து
வணங்கினார். இதன் பிறகும் தலைவியின் மன மயக்கம்
நீங்கவில்லை. இதனைத் தலைவி.
சீரார்
செழும்புழுதிக் காப்பிட்டு -
செங்குறிஞ்சித்
தாரார் நறுமாலைச் சாத்தற்குத்தான்
பின்னும்
நேரா தனவொன்று நேர்ந்தாள் - அதனாலும்
தீராதென் சிந்தைநோய் தீராது
(அடிகள்
32-35) |
 |
(புழுதி = மண்; காப்பு = பாதுகாப்பாக; தார்
= மாலை; சிந்தை = மனம்; நோய் =
துன்பம்)
தலைவியின் நிலை கண்டு அவள் தாயார் வருந்தி மண்
காப்பு இடுகின்றாள். நோய் நீங்குவதற்காக,
பாகவதர்களின் கால்
தூசியைக் காப்பாக இடும் வழக்கம் உண்டு. சாத்தன் என்ற
தேவதையையும் வணங்கி வழிபட்டனர். எதனாலும் தலைவியின்
துன்பம் நீங்கவில்லை.
5.3.2 தலைவியும் குறி
கேட்டலும்
ஏதேனும் நோய் ஏற்பட்டால் அந்த நோய்
வருவதற்கு உரிய
காரணம் யாது என்று குறத்தியை அழைத்துக் குறி கேட்கும்
வழக்கம் அக்காலத்தில் காணப்பட்டது. அதன்படி தலைவியின் நிலையைக் குறி கேட்க
நினைக்கின்றனர்.
ஆரானும் மூதறியும் அம்மனைமார்
சொல்லுவார்
பாரோர் சொலப்படும் கட்டுப் படுத்திரேல்
ஆரானும் மெய்ப்படுவன் என்றார்
(அடிகள் : 37-39) |
(முது அறியும் அம்மனைமார் = முதுமையான அறிவை
உடைய
தாய்மார்கள்; பாரோர் சொலப்படும் =
உலக வழக்கப்படி;
கட்டுப்படுத்தல் = குறி
கேட்டல்)
• குறத்தி வருகை
தலைவியின் நிலை கண்ட முதுமையான அறிவை உடைய
அவள் தாய்மார்கள் கூறிய வழக்கத்தின்படி குறத்தியை
அழைத்துக் குறி கேட்கலாம் என்று முடிவு செய்கின்றனர்.
இதைக்
கேட்டுக் கொண்டிருந்த குறத்தி ஒருத்தி தானாகவே
வந்து குறி
கூறத் தொடங்குகிறாள்.
• குறி கூறும் முறை
இவ்வாறு வந்த குறத்தி குறி கூறும் தன்மை
காட்டப்படுகிறது.
அந்தப் பாடல்
அடிகளைப்
பார்ப்போமா?
சீரார் சுளகில் சிலநெல் பிடித்தெறியா
வேரா விதிர்விதிரா மெய்சிலிரா கைமோவா
பேரா யிரம்உடையான் என்றாள் -
பெயர்த்தேயும்
காரார் திருமேனி காட்டினாள்; கையதுவும்
சீரார் வலம்புரியே என்றாள் - திருத்துழாய்த்
தாரார் நறுமாலை கட்டுரைத்தாள் (அடிகள் 41-46) |
 |
(பிடித்து எறியா - எடுத்து வீசி;
சுளகு - முறம்; வேரா
- வியந்து; விதிரா -
விதிர் விதிர்த்து; மெய்
சிலிரா - உடம்பு சிலிர்த்து; மோவா -
மோந்து பார்த்து; பெயர்த்தேயும் - மீண்டும்; வலம்புரி
-
வலம்புரிச் சங்கு; துழாய் - துளசி)

|
குறத்தி வந்தாள். சுளகில் நெல்லை
எடுத்து
வீசினாள். விதிர் விதிர்த்தாள்.
மெய் சிலிர்த்தாள். கையை மோந்து
பார்த்தாள் ஆயிரம் பெயர்களை உடைய
திருமால் அல்லவா வந்துள்ளான் என்றாள். கரிய மேகத்தைக் காட்டி
திருமாலின் நிறத்தைக் கூறினாள்.
அவன்
கையில் சங்கு உள்ளது என்றாள். இத்தகையவன் யார்
என்று கூறுகிறேன்
என்று குறத்தி கூறத் தொடங்கினாள். |
• திருமாலின் பெருமை
குறத்தி திருமாலின் பெருமைகளைக்
கூறுகின்றாள். குறள் வடிவம் எடுத்து உலகைத் தன் அடியால்
அளந்தவன்.
இலங்கை நகரை அழித்தவன். கல்மழை பெய்த
போது
கோவர்த்தன கிரி என்ற மலையைக் குடையாகப் பிடித்துப்
பசுக்களைக் காத்தவன். வெண்ணெய் உண்பதில் ஆசை
உள்ளவன். இராவணனின் தங்கை ஆகிய சூர்ப்பனகையின்
மூக்கையும் காதுகளையும் அறுத்தவன். சீதையை மீட்பதற்காக
இராவணனுடன் போர் புரிந்தவன்.
நரசிம்ம வடிவம் எடுத்து
இரணியன் மார்பைப் பிளந்தவன். முதலையின் வாயில்
அகப்பட்ட கஜேந்திரன் ஆகிய
யானையைக் காத்தவன். இவ்வாறு
பல பெருமைகளை உடையவன் திருமால். அவனுக்குப் பல
பெயர்கள் உண்டு. அந்தத் திருமாலே உங்கள் பெண்ணுக்கு
நோய் உண்டாக்கியவன்
என்று குறத்தி கூறுகிறாள்.
பேரா யிரம்உடையான்,
பேய்ப்பெண்டீர்! நும்மகளைத்
தீரா நோய்செய்தான் எனஉரைத்தாள்
(அடிகள்
103-104) |
(பேய்ப்பெண்டீர் = அறிவு இல்லாத பெண்களே!; தீரா
= தீர்க்க முடியாத; உரைத்தாள் = சொன்னாள்)
என்று தலைவி கூறுகிறாள்.
முன்னே கூறியவாறு பல்வேறு பெருமைகளைக்
கொண்ட
திருமாலே உங்கள் மகளுக்கு இத்தகைய துன்பத்தைக்
கொடுத்துள்ளான். எனவே, நீங்கள்
தாழ்ந்த கடவுளால் இந்த
நோய் வந்துள்ளது என்று எண்ணி
வருந்தாதீர்கள் என்று குறத்தி
தலைவியின்
தாய்மார்களிடம் கூறுகிறாள்.
5.3.3 தலைவியும் தூதும்
தலைவனின் பிரிவைத் தாங்கமாட்டாத தலைவி
நெஞ்சைத்
தலைவனிடம் தூதாக அனுப்புகிறாள். தூதுச் செய்தி
இடம் பெறும்
அடிகளையும் பார்ப்போமா?
வாராய் மடநெஞ்சே! வந்து - மணி
வண்ணன்
சீரார் திருத்துழாய் மாலை நமக்குஅருளி
தாரான் தருமென் றிரண்டத்தில் ஒன்றுஅதனை
ஆரானும் ஒன்னாதார் கேளாமே,
சொன்னக்கால்
ஆராயும் மேலும், பணிகேட்டு அதுஅன்றெனிலும்;
போராது ஒழியாது போந்திடுநீ என்றேற்குக்
காரார் கடல்வண்ணன் பின்போன
நெஞ்சமும்
வாராதே என்னை மறந்தது தான்
(அடிகள்
: 115-122) |
 |
(வாராய் = வருவாயாக; மணிவண்ணன் =
நீல நிறமுடைய
திருமால்; தாரான் =
தரமாட்டான்; தரும் = தருவான்;
இரண்டத்தில்
= இரண்டில்; ஒன்னாதார் = விரும்பாதவர்;
கேளாமே
= கேட்காமல்; சொன்னக்கால் = சொன்னாய்
ஆகில்; போராது ஒழியாது = தங்கி விடாமல்; போந்திடு
= வந்துவிடு;
என்றேற்கு = என்ற எனக்கு; கடல்
வண்ணன் = கடல் போன்ற நீல நிறம் உடைய திருமால்)
தலைவி நெஞ்சை அழைக்கின்றாள். நெஞ்சே! நீல நிறம்
உடைய திருமால் எனக்குத் துளசி மாலையைத்
தருவானா? தர
மாட்டானா? என்ற இரண்டில் ஒன்றைக் கேட்டுத் தெரிந்து
கொள். என்னை விரும்பாதவர்கள் அங்குத் திருமாலின்
பக்கத்தில் இருந்தால் இதைக் கேட்காதே. திருமாலிடம் நீ
கேட்கும் போது அவன் என்னைத் தெரியாது
என்று கூறினாலும்
சரி. அதைக் கேட்டுத் தெரிந்துவிட்டு
வந்துவிடு. அங்கே தங்கி
விடாதே என்று கூறுகிறாள். ஆனால்,
திருமாலிடம் தூது சென்ற
அவள் நெஞ்சம் மீண்டும் அவளிடம்
வரவில்லை. ''அது என்னை
மறந்து விட்டது'' என்கிறாள் தலைவி.
5.3.4 தலைவியும் மடல்
ஏறுதலும்
தலைவி தலைவனாகிய திருமாலை அடைய வேண்டி ஊர்
ஊராகச் சென்று மடல் ஏறப் போவதாகக் கூறுகிறாள்.
திருமாலின் திருவடிகளைக் கண்டு மகிழும்
வரையில் நான்
ஊர் ஊராகச் செல்வேன் என்று தலைவி கூறுகிறாள். எந்த எந்த
ஊர்களுக்குச் செல்வேன்
என்பதையும் கூறுகிறாள். அந்தப் பாடல்
அடிகள் இதோ
தரப்படுகின்றன.
. . . . . . . . . . . . . . . .நானவனைக்
காரார் திருமேனி காணுமளவும் போய்,
சீரார் திருவேங் கடமே திருக்கோவில்
ஊரே மதிள்கச்சி ஊரகமே பேரகமே
பேரா மருதுஇறுத்தான் வெள்ளறையே வெஃகாவே
பேராலி தண்கால் நறையூர் திருப்புலியூர்
ஆராமம் சூழ்ந்த அரங்கம் - கணமங்கை
காரார் மணிநிறக் கண்ணனூர் விண்ணகவும்
சீரார் கணபுரம் சேறை திருவழுந்தூர்
காரார் குடந்தை கடிகை கடன்மல்லை
ஏரார் பொழில்சூழ் இடவெந்தை நீர்மலை
சீராரும் மாலிரும் சோலை திருமோகூர்
பாரோர் புகழும் வதரி வடமதுரை
ஊராய வெல்லாம் ஒழியாமே
(அடிகள் : 137-149) |
 |
(அளவும் = வரையிலும்; சீர் = சிறப்பு;
மதிள் = மதில்; மருது =
மருதமரம்; இறுத்தான்
= ஒடித்தவன்)
மேகம் போன்ற கரிய நிறம் கொண்ட
திருமாலைக் காணும் வரை நான் பின்வரும் இடங்களுக்குச்
செல்வேன் என்று தலைவி கூறுகிறாள். அந்த இடங்கள் எவை
என்று பார்ப்போமா?
• திருமால் எழுந்தருளியுள்ள இடங்கள்
திருவேங்கடமலை, திருக்கோவிலூர், ஊரகம்,
திருவெள்ளறை, திருவெஃகா, திருவாலி, திருத்தண்கால், திருநரையூர்,
திருப்புலியூர், திருவரங்கம், திருக்கண்ண
மங்கை, திருவிண்ணகர், திருக்கண்ணபுரம், திருச்சேறை, திருவழுந்தூர், திருக்குடந்தை,
திருக்கடிகைத்தடங்குன்றம்,
திருக்கடல் மல்லை, திருவிடவெந்தை, திருநீர் மலை, திருமால் இரும்சோலை மலை, திரு மோகூர்,
வதரியாசிரமம்,
வடமதுரை முதலிய திருமால் எழுந்தருளி உள்ள இடங்களுக்குச்
செல்லப் போவதாகத் தலைவி கூறுகிறாள்.
இவ்வாறு இந்த இடங்களுக்கு எல்லாம் சென்று,
திருமாலின் பெயர்களைக் கூறிக் கொண்டு மடல் ஏறுவேன்
என்கிறாள். இது பின்வரும் அடிகளில் காட்டப்படுகிறது.
ஓரானைக் கொம்பொசித்து
ஓர்ஆனை கோள்விடுத்த
சீரானைச் செங்கண் நெடியானைத் தேன்துழாய்த்
தாரானை தாமரைபோல் கண்ணானை-எண்ணரும்சீர்ப்
பேரா யிரமும் பிதற்றி - பெரும் தெருவே
ஊரார் இகழிலும் ஊராது ஒழியேன் நான்
வாரார்பூம் பெண்ணை மடல்
(அடிகள் 150-153) |
 |
(கோள் = துன்பம்; விடுத்த =
நீக்கிய; சீர் = சிறப்பு; ஊராது =
ஏறமாட்டாது; ஒழியேன் = நிறுத்த மாட்டேன்; பெண்ணை
மடல் = பனை மடல்)
திருமால் குவலயாபீடம் ஆகிய யானையின் கொம்பை
ஒடித்தவன்; கஜேந்திரன் ஆகிய யானையின் துன்பத்தை
நீக்கியவன்; சிவந்த கண்களை உடையவன்; எனக்கு
எட்டாதவன்;
தேன் நிறைந்த துளசி மாலையை அணிந்தவன்;
தாமரை போன்ற
கண்களை உடையவன்; இத்தகைய பெருமைகளை உடைய
தலைவனுடைய பெயர்களை எப்போதும் பிதற்றிக் கொண்டு
பெரிய வீதிகளின் வழியே பனை மடலில் ஏறுவேன்.
ஊர் மக்கள்
பழித்தாலும் மடல் ஏறுவதை நிறுத்த மாட்டேன் என்று
கூறுகிறாள்.
இதுவே, சிறிய திருமடல் என்ற நூலின் போக்கு
ஆகும். |