6.0 பாட முன்னுரை தமிழ் மொழியில் காணப்படும் சிற்றிலக்கிய வகைகளில் கோவை இலக்கியமும் ஒன்று ஆகும். இந்த இலக்கிய வகை அகப்பொருள் கோவை என்ற பெயராலும் அழைக்கப்படும். இது நாடகப்போக்கு உடைய இலக்கிய வகையாகத் திகழ்கின்றது. இந்தக் கோவை இலக்கிய வகையைத் திருக்கோவையார் என்ற நூலின் துணையுடன் விளக்கும் வகையில் இப்பாடம் அமைகின்றது. |