சிற்றிலக்கிய
வகைகளுள் ஒன்றாகிய கோவை இலக்கியத்தைப்
பற்றி இப்பாடம் விளக்குகிறது. கோவை இலக்கியத்தின்
தோற்றம் பற்றியும் கோவை நூல்கள்
பற்றிய பொதுவான
செய்திகளையும் விளக்குகிறது. மாணிக்கவாசகரின்
திருக்கோவையார் இப்பாடத்தில் விளக்கமாகப்
பேசப்படுகிறது.
கோவையின்
பாடுபொருள் பற்றியும்
தலைவன், தலைவி ஆகியோரின்
நிலை குறித்தும் விளக்கிச்
செல்கிறது. இதில் கோவை இலக்கியத்தின் அகத்துறைகள்
பலவும் விளக்கம் பெறுகின்றன. பாட்டுடைத்
தலைவனாகிய
சிவபெருமானின் பெருமைகளை விரிவாகப் பேசுகிறது
இப்பாடம்.
|