நண்பர்களே! இதுவரையும் தமிழ் இலக்கிய வகையில் ஒன்றாகிய பிள்ளைத்தமிழ் பற்றிய செய்திகளைத் தெரிந்து கொண்டீர்கள். அச்செய்திகளை மீண்டும் ஒருமுறை நினைத்துப் பாருங்கள். பிள்ளைத்தமிழ் என்றால் என்ன என்பது பற்றிய செய்திகளை அறிந்து கொண்டீர்கள். பிள்ளைத்தமிழ் இலக்கிய அமைப்புப் பற்றித் தெரிந்து கொண்டீர்கள். மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் பற்றிச் சிறப்பு நிலையில் செய்திகளைப் புரிந்து கொண்டீர்கள். மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழின் ஆசிரியர் வரலாற்றை அறிந்து கொண்டீர்கள். இப்பிள்ளைத்தமிழின் இலக்கிய நயம் வாய்ந்த பாடல்கள் பற்றியும் தமிழ் மொழியின் சிறப்புகள் பற்றியும் தெரிந்து கொண்டீர்கள்.
|