சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்றாகிய பள்ளு இலக்கியம் பற்றி இப்பாடம் பேசுகிறது.
பொதுவான பள்ளு இலக்கியத்தின் தோற்றம், பொது அமைப்பு, முதலியன
முதலில் விளக்கப்படுகின்றன. பின்னர் பள்ளுகளில் சிறந்ததாகக் கருதப்படும் முக்கூடற்பள்ளு
பற்றி விரிவாகச் சொல்கிறது இப்பாடம்.
பள்ளர்களாகிய உழவர் வாழ்க்கை முறை
விளக்கமாக இப்பாடத்தில் சொல்லப்படுகிறது. மூத்தபள்ளி, இளையபள்ளி ஆகிய
இருவர் உரையாடல் வழி சைவ, வைணவ மதங்களைப் பற்றிச் சுவையாகக் கூறப்படுகிறது.
சிற்றிலக்கிய வகைகளில் குறவஞ்சிக்கும் பள்ளுக்கும் தனியிடம்
உண்டு. அவை மன்னர்களையோ இறைவனையோ பாடாமல் மக்களைப் பற்றிப் பாடிப் பெருமை பெற்றன
என்பதும் இப்பாடத்தில்
குறிக்கப்படுகிறது. |