பாட்டுடைத் தலைவன் உலா வருதலைச் சிறப்பித்துப்
பாடுகிறது. உலாவின் பொது இலக்கணம்,
அதன் தோற்றம்,
வளர்ச்சி ஆகியன இப்பாடத்தில் இடம்பெறுகின்றன.
கவிச்சக்கரவர்த்தி ஒட்டக்கூத்தர் இயற்றிய மூவர் உலா
இப்பாடத்தில் விரிவாகப் பேசப்படுகிறது.
ஒட்டக்கூத்தரின்
சிறப்பும், பாட்டுடைத் தலைவன், பாட்டுடைத்
தலைவனுடைய முன்னோர்கள் சிறப்பும் விரிவாகப்
பேசப்படுகின்றன.
பாட்டுடைத்
தலைவன் உலாப்போகும்
போது அவனைக் கண்ட மக்களின் மகிழ்ச்சியும், ஏழு
பருவ மகளிர் (பேதை முதல் பேரிளம்பெண்
வரை)
காதல்கொண்ட நிலையும் மிகச் சுவையாக
விளக்கப்படுகிறது.
|