பாடம் - 1

C02111 தமிழ் இலக்கண அறிமுகம் : எழுத்து, சொல்

இந்தப் பாடம் என்ன சொல்கிறது?

இலக்கியத்திற்கும் இலக்கணத்திற்கும் உள்ள தொடர்பு பற்றி இந்தப் பாடம் தெரிவிக்கிறது. தமிழில் உள்ள இலக்கணப் பிரிவுகளைப் பற்றிக் கூறுகிறது. ஒவ்வோர் இலக்கணப் பிரிவிலும் தோன்றியுள்ள இலக்கண நூல்களைப் பற்றியும் கூறுகிறது. எழுத்து இலக்கணத்தின் அமைப்பைப் பற்றி விளக்குகிறது. சொல் இலக்கணத்தின் அமைப்பைப் பற்றியும் தெளிவு படுத்துகிறது.

இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன்பெறலாம்?

தமிழில் உள்ள இலக்கணங்களின் வகைகளைக் கணக்கிடலாம்.
தமிழ் இலக்கண நூல்களின் பட்டியலை அறியலாம்.

தொல்காப்பியம், நன்னூல் ஆகிய நூல்கள் பற்றி விளங்கிக் கொள்ளலாம்.

தமிழில் எழுத்து இலக்கணம் எவ்வாறு அமைந்து உள்ளது என்று காணலாம்.

தமிழில் உள்ள சொல் இலக்கணத்தின் அமைப்பை உணரலாம்.