பாடம் - 5

C02115 மொழி முதல், மொழி இறுதி எழுத்துகள்

 

 

இந்தப் பாடம் என்ன சொல்கிறது?

உயிர்மெய் எழுத்துகள் சொல்லின் முதலிலும் இறுதியிலும் வரும் முறையைத் தெரிவிக்கிறது. ஒரு சொல்லில் வரும் எழுத்துகள் யாவை என்பதை உணர்த்துகிறது.

சொல்லின் இறுதியில் வரும் எழுத்துகள் பற்றியும், ஒரு மெய் எழுத்தை அடுத்து எந்த மெய் எழுத்து வரும் என்பதையும் விளக்குகிறது.

 

இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?

ஒரு சொல்லின் முதலிலும் முடிவிலும் வரும் உயிர்மெய் எழுத்துகளை எப்படிப் பகுத்துக் கொள்ள வேண்டும் என்பதை அறிந்து கொள்ள முடியும்.

ஒரு சொல்லின் முதலில் வரும் உயிர், மெய் எழுத்துகள் யாவை என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.

ஒரு சொல்லின் இறுதியில் வரும் மெய் எழுத்துகளையும், உயிர் எழுத்துகளையும் பற்றி அறியமுடியும்.