6.6 தொகுப்புரை

ஒரு மெய் எழுத்தை அடுத்து எந்த மெய் எழுத்து வரும் என்னும் வரையறைக்கு மெய்ம்மயக்கம் என்று பெயர் என்பதை இந்தப் பாடம் தெரிவித்துள்ளது.

மெய்ம்மயக்கத்தின் வகைகளான வேற்றுநிலை மெய்ம்மயக்கம், உடன்நிலை மெய்ம்மயக்கம் ஆகியவற்றை இப்பாடம் விளக்கியுள்ளது.

ஈர்ஒற்று மயக்கம் என்றால் என்ன? என்பது பற்றியும் செய்யுளில் மட்டும் இடம் பெறும் மகரக்குறுக்கமும் ஈர்ஒற்றுமயக்கம் என்பது பற்றியும் எடுத்துரைத்துள்ளது.

தன் மதிப்பீடு : வினாக்கள் - II
1.

உடன்நிலை மெய்ம்மயக்கம் என்றால் என்ன?

விடை
2.

ஈர் ஒற்று மயக்கம் என்றால் என்ன?

விடை
3.

தனிமொழி மகரக் குறுக்கத்தை மெய்ம்மயக்கம் என்று கூற இயலுமா?

விடை