பாடம் - 6

C02116 மெய்ம்மயக்கம்

 

இந்தப் பாடம் என்ன சொல்கிறது?

மெய்ம்மயக்கம் என்றால் என்ன? என்பதைத் தெரிவிக்கிறது. மெய்ம்மயக்கத்தின் வகைகளை விளக்கி உரைக்கிறது. மெய்ம்மயக்கத்திற்குப் பல்வேறு எடுத்துக்காட்டுகளையும் வழங்குகிறது.

 

இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?

மெய்ம்மயக்கம் என்றால் என்ன? என்பதைப் பற்றி அறிந்து கொள்ளலாம் .

வேற்றுநிலை மெய்ம்மயக்கம், உடன்நிலை மெய்ம் மயக்கங்களைப் பற்றித் தெரிந்து கொள்ளலாம்.

ஈர் ஒற்று மயக்கம் என்றால் என்ன? என்பதை விளங்கிக் கொள்ளலாம்.

மகரக் குறுக்கத்தில் இடம் பெறும் ஈர் ஒற்று மயக்கத்தை உணர்ந்து கொள்ளலாம்.