சென்ற பாடத்தில் தமிழ்மொழியில்
எழுத்துஒலிகளின்
பிறப்புப் பற்றிய பொதுவான இலக்கணத்தை அறிந்து கொண்டீர்கள்.
எழுத்துஒலிகள் பிறக்கத் தேவைப்படும் முயற்சியும் உடல்
உறுப்புகளின் ஒத்துழைப்பும் எவ்வாறு அமைய வேண்டும்
என்பதையும் நன்கு விளங்கிக் கொண்டிருப்பீர்கள். தமிழ் இலக்கண
நூல்கள் எழுத்துஒலிகளின் பிறப்பு இலக்கணத்தை அறிவியல்
முறைப்படி ஆராய்ந்து விளக்கியிருப்பதையும் தெரிந்து
கொண்டீர்கள். இந்தப் பாடத்தில் உயிர் எழுத்தொலிகள் பிறக்கும்
முறை குறித்து விரிவாகக் காணலாம்.
|