2.4 வினாப்பெயர், விளிப்பெயர் முன் வல்லினம்

சொல்லின் ஈற்றில் வருகின்ற ஆ,ஏ,ஓ என்னும் மூன்று வினா எழுத்துகளுக்கு முன்னும், யா என்னும் வினாப்பெயருக்கு முன்னும், விளிவேற்றுமை ஏற்ற பெயர்களுக்கு முன்னும் வரும் வல்லினம் இயல்பாகும்.

ஈற்றுயா வினா விளிப்பெயர் முன் வலி இயல்பே - (நன்னூல், 160)

சான்று :

அவனா + தந்தான் = அவனா தந்தான் ?
அவனே + தந்தான் = அவனே தந்தான் ?
அவனோ + தந்தான் = அவனோ தந்தான் ?

யா + தந்தான் = யா தந்தான் ? (எது தந்தான் ?)

தம்பீ + தா = தம்பீ தா
தோழீ + தா = தோழீ தா