2.5 முன்னிலை வினை, ஏவல் வினை முன் வல்லினம் உயிர் எழுத்துகளையும் ய,ர,ழ என்னும் மூன்று மெய் எழுத்துகளையும் இறுதியாகக் கொண்ட முன்னிலை வினைமுற்று, ஏவல் வினைமுற்று ஆகியவற்றின் முன்னர் வரும் க, ச, த, ப என்னும் வல்லின மெய் எழுத்துகள் இயல்பாயும், விகற்பமாயும் வரும். ஆவி யரழ இறுதி முன்னிலை
வினை, விகற்பமாய் வருதலாவது, ஒரே புணர்ச்சியில் வல்லினம் இயல்பாகவும், மிக்கும் வருதலாகும். சான்றாக, கீழ்+குலம் என்பது கீழ்குலம் என இயல்பாகவும், கீழ்க்குலம் என வருமொழி முதல் எழுத்துக்கு ஏற்ற வல்லினம் மிக்கும் வருவதைச் சொல்லலாம். இதனை, கீழின்முன் வன்மை விகற்பமும் ஆகும். (நன்னூல்,226) என்ற நூற்பாவால் அறியலாம். சான்று : முன்னிலை வினைமுற்று உண்டனை + கொற்றா = உண்டனை கொற்றா ஏவல் வினைமுற்று வா + கொற்றா = வா கொற்றா இங்கே காட்டிய சான்றுகளில் உயிர் எழுத்துகளையும், ய, ர, ழ என்னும் மெய் எழுத்துகளையும் இறுதியாகக் கொண்ட முன்னிலை வினைமுற்று, ஏவல்வினை முற்றுகளின் முன் வந்த க, ச, த, ப என்னும் வல்லின மெய் எழுத்துகள் மிகாது இயல்பாய் வந்தன. நட + கொற்றா = நட கொற்றா, நடக்கொற்றா
இங்கே காட்டிய சான்றுகளில் முன்னிலை வினைமுற்றின் முன்வரும் வல்லினம் இயல்பாகவும், மிக்கும் வந்தது. |