4.5 ஊகார ஈற்றுச் சிறப்பு விதி பூ என்னும் ஓர் எழுத்துப் பெயர்ச்சொல்லின் முன்னர் வல்லினம் வந்தால், அவ்வல்லினம் பொதுவிதிப்படி மிகுதலே அல்லாமல், அவ்வல்லினத்துக்கு இனமான மெல்லினமும் மிகும். பூப்பெயர் முன்இன மென்மையும் தோன்றும் (நன்னூல், 200) சான்று : பூ + கொடி = பூங்கொடி பொதுவிதிப்படி பூ முன்னர் வரும் வல்லினம் மிகும். சான்று : பூ + பறித்தாள் = பூப்பறித்தாள்
|