4.6 ஏகார, ஓகார ஈற்றுச் சிறப்பு விதி ஏகாரமும் ஓகாரமும் இடைச்சொற்கள் ஆகும். இவை பெரும்பாலும் பெயர்ச்சொற்களுக்கு இறுதியில் வரும். ஏ, ஓ என்னும் இடைச்சொற்களுக்கு முன்னர் வரும் வல்லினம் பொதுவிதிப்படி மிகாமல் இயல்பாகும். இடைச்சொல் ஏ ஓ முன்வரின் இயல்பே. (நன்னூல், 201) சான்று : அவனே + கண்டான் = அவனே கண்டான் |