6.6 தொகுப்புரை

தமிழக வரலாற்றில் சங்க காலம் என்பது இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட காலமாகும். அன்று காதல் வாழ்விலும் வீர வாழ்விலும் சிறந்த பண்பாடு நிலவியதை மேலே கண்ட இலக்கியங்கள் நமக்குத் தெளிவாகக் காட்டுகின்றன. பரிசு பெற்று வருபவர், செல்வமின்றி வருந்தும் வறியவருக்கு வளமைபெற வழிகாட்டுதல்; செல்வமிக்க அரசர்கள், புலவரைப் போற்றி அவர்கள் முன் அடங்கி ஒழுகுதல்; பாய்ந்து வரும் காளையை இளைஞன் பற்றி அடக்கித் தன் வீரத்தைக்காட்டிப் பெண்களைத் திருமணம் செய்து கொள்ளுதல்; வைதிகச் சடங்குகள் அற்ற திருமணம்; மனத்துன்பம் ஏற்பட்ட காலத்தில் வடக்குத் திசைநோக்கி அமர்ந்து உண்ணாநோன்பு கொண்டு உயிரை விடுதல் ஆகியன தமிழர் பண்பாட்டில் குறிக்கத்தக்க சில கூறுகளாகும். இச்செய்திகள் இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ளமையினை நீங்கள் அறிந்தீர்களா?         

தன் மதிப்பீடு : வினாக்கள் - II

1. ஆதிமந்தியின் துயரத்திற்குக் காரணம் யாது?

விடை

2. பூவைக் கண்டு தாய் அதிர்ச்சி அடைந்தமை ஏன்?

விடை

3. தண்ணீர் கொடுத்த தலைவி தலைவனைப் பற்றித் தாயிடம் என்ன கூறினாள்?

விடை

4. முதுகு காட்டினான் மகன் என்று கேட்ட தாய் என்ன சபதம் செய்தாள்?
விடை