பாடம் - 2

C03122 கலைகள் வளர்த்த பண்பாடு

இந்தப் பாடம் என்ன சொல்கிறது?

Audio E

கலை என்பது பண்பாடு வளர்ந்த இடத்தில் காணப்படுவது. இசைக்கு யானைகூடக் கட்டுப்படும். விய, சிற்பக் காட்சிகள் கண்டோரை மெய்ம்மறக்கச் செய்யும். வானளாவிய கட்டடங்கள், கோபுரங்கள், மகால்கள், அரண்மனைகள், மலைக்குடைவுகள் ஆகியன கலை வளர்த்த தமிழகத்தில் இன்றும் அழியாமல் உள்ளன. இவற்றைப் பற்றிய ஒரு சுருக்கமான வரலாற்றை இப்பாடம் சொல்கிறது.


இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?
 

  • பண்பாடு சிறந்த நிலையில் கலைகள் உருவாகும் என்பதை அறியலாம்.

  • சிந்தனைகளைக் கற்பனை கலந்து உருவாக்கியனவே கலைகள் என்பதை உணரலாம்.

  • இசைக்கலை, ஆடற்கலை, ஓவியக் கலை, சிற்பக்கலை, கட்டடக்கலை ஆகியவையே உலகெங்கும் வாழும் கலைகள் என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.

  • இன்றைய இசை வழக்கில் வழங்கும் ஏழு சுரங்களுக்கும் பழங்காலத்தில் வழங்கிய தமிழ்ப் பெயர்களை அறியலாம்.

  • தமிழகத்துச் சிற்பங்களைப் பற்றித் தெரிந்து கொள்ளலாம்.

  • கோயில்களில் பல வகை அமைப்புகள் உள்ளதை அறியலாம்.


பாட அமைப்பு