5.6 தொகுப்புரை

தமிழர் பண்பாட்டில் சமணம் பல புதிய விளக்கங்களை ஏற்படுத்தியது. சல்லேகனை என்ற ஒரு நோன்பு சமணர்களால் குறிப்பிடப் படுகின்றது. கொடிய நோய், பெருந்துன்பம் ஆகியவை காரணமாக உடம்பை வருத்திக் கொண்டு உண்ணா நோன்பு இருந்து வடக்குத் திசை நோக்கி உட்கார்ந்து உயிர் விடுவது இந்த நோன்பின் நெறியாகும். இதனைச் சங்க காலத்து அரசர்களாகிய கோப்பெருஞ்சோழனும், பெருஞ்சேரலாதனும் கடைப்பிடித்தனர். பள்ளி, பள்ளிக்கூடம் ஆகியன சமணர்கள் கொண்டுவந்த சொல் வழக்குகள் ஆகும்.

பௌத்த சமயத்தினர் வழிபட்ட பௌத்தக் கோயில்கள் ஐயனார் கோயில் எனப் பெறும். இக்கோயில்கள் பிற்காலத்தில் சைவ சமயத்திற்குரியனவாக மாறிவிட்டன. புத்தரைத் திருமாலின் அவதாரம் என்று இந்துக்கள் கருதத் தொடங்கினர். யாகங்கள் செய்யக்கூடிய வழக்கம் பௌத்த சமயத்தால் தமிழ்நாட்டிலிருந்து நீங்கியது.

இவ்வாறு பல மாற்றங்களை உருவாக்கிய பௌத்தமும் சமணமும் தமிழர்கள் பண்பாட்டு வரலாற்றில் குறிப்பிடத்தக்க இடத்தைப் பெறுகின்றன.

 

தன் மதிப்பீடு : வினாக்கள் - II

  1. தீபாவளிப் பண்டிகை எவ்வாறு தோன்றியது?

  2. சமண இலக்கியங்களில் குறிப்பிடத்தக்க இரண்டைக் கூறுக.

  3. பௌத்த இலக்கிய நூல் எது?

  4. பௌத்த இலக்கண நூல் எது?

  5. பௌத்த சமயத்தின் பிற நூல்களைப் பற்றிக் குறிப்பு வரைக.