1.7 தொகுப்புரை

இசுலாமிய மரபினரிடமிருந்து, நாயக்கர், தமிழக ஆட்சியைக் கைப்பற்றினர். தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்ட இவர்களின் ஆட்சியில் தமிழ் வளரவில்லை. எனினும், தமிழரும் அயலவரும் பூசலின்றி வாழ்ந்தனர். கலைகள் செழித்தன. சமயங்கள் சமரச உணர்வு பூண்டிருந்தன. கோயில்கள் சிறப்புப் பெற்றன. பொதுநிலையில் நாயக்கர் காலத்தில் தமிழர் பண்பாடு நலிவு அடையவில்லை எனலாம்.

தன் மதிப்பீடு : வினாக்கள் - II

1. திருமலை நாயக்கர் மகால் பற்றிக் குறிப்பு வரைக.

2. மாசித் திருவிழா பற்றி எழுதுக.

3. குமரகுருபரர் இயற்றிய நூல்கள் இரண்டனைக் குறிப்பிடுக.

4. நாயக்கர் காலச் சாதிப் பிரிவுகள் யாவை?

5. நாயக்கர் காலத்தில் நாடாண்ட அரசியர் இருவர் பெயரைக் குறிப்பிடுக.

6. நாயக்கர் காலப் பழக்கங்களில் இரண்டனைக் குறிப்பிடுக.