3.5 தொகுப்புரை
ஐரோப்பியர் வரவு தமிழ்நாட்டின் புறக்கோலத்தை
மாற்றியது. ஆயினும், தமிழகத்தின் அகப்பண்பாட்டை
ஐரோப்பிய நாகரிகம் மாற்றிவிடவில்லை. உணவு உடையில்
எளிமை, பற்று மிகுந்த
இல்லறம், மனிதநேயம், வலிய வந்து
நன்மை செய்யும் மனித
உறவு ஆகியன தமிழர் பண்பாட்டுக்
கூறுகளாக அமைந்து
அயலவரைக் கவர்ந்தன. |