|
இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்? |
-
பல்வேறு அரசர்களாலும் குறுநில மன்னர்களாலும்
ஆளப்பட்டு வந்த நம் நாட்டை ஆங்கிலேயர் தம் ஆளுகையின் கீழ்க் கொண்டு வந்ததையும்,
அந்த அந்நிய ஆட்சியை எதிர்த்துக் குரல் கொடுத்த வீரர்களைப் பற்றியும் அறியலாம்.
-
ஆயுதமேந்தி ஆங்கிலேயரை எதிர்த்து நின்ற நிலை
மாறி, காந்தியடிகளின் தலைமையில், அந்நியத் துணி மறுப்பு, ஒத்துழையாமை ஆகிய
வழிகளில் சுதந்திரப் போராட்டம் தொடர்ந்ததைப் பற்றித் தெரிந்து கொள்ளலாம்.
-
உப்புக்கு வரி விதித்ததை எதிர்த்து நடந்த
போராட்டம் பற்றியும், அதில் பங்கு கொண்டவர்களைப் பற்றியும் அறிந்து மகிழலாம்.
-
தமிழ்நாட்டில் பாரதியார், வ.உ.சி.
போன்றவர்களும், பின்னாளில் திரு.வி.க., பெரியார் ஈ.வே.ரா. போன்றவர்களும் மேற்கொண்ட
நடவடிக்கைகளைப் பட்டியலிடலாம்.
-
விடுதலைப் போரில் தமிழ்ப் பத்திரிகைகளின்
பங்களிப்புக் குறித்துத் தெரிந்து கொள்ளலாம்.
|
|
|