6.7 தொகுப்புரை தமிழ் நெஞ்சங்களே! சான்றோர்களே! இரண்டாயிரம்
ஆண்டுக் காலத் தமிழர் பண்பாட்டை இங்கே கண்டீர்கள்.
காலம் அழிந்தாலும், வானும் நதியும்
மாறினாலும், தமிழனின்
பண்பாட்டுக் கூறுகள் சில மாறாமல்
நிலைபேறு
உடையனவாய்த்
திகழ்கின்றன. மனித
நல்லிணக்கமும்,
உயிரிரக்கமும், உடன்பிறப்புப் பண்பும், மாசற்ற தூய உள்ளமும்,
உயிரோடு
பிணைந்த காதலும், எந்த
நிலையிலும் உடையாத
குடும்ப
உறவும் அப்பண்பாட்டின் நிலைபேற்றுக்கு
வழிவகுத்தவை
எனலாம்.
|