இந்தப்
பாடம் என்ன சொல்கிறது? |
|
தமிழர் பண்பாட்டில் கழிந்தன
எவை, நிலைபேறாய்
நின்றன எவை, வந்தன எவை, பிற பண்பாடுகளுக்குச்
சென்றன எவை
என்பவற்றை இப்பகுதி
விளக்குகின்றது.
தமிழர் பண்பாட்டின் வலிமை எது
என்பதைக் காட்டுகின்றது.
தமிழர் பண்பாட்டின்
மெலிவு எது என்பதை உணர்த்துகிறது.
இன்று தமிழர்
பண்பாட்டின் நிலை யாது எனத்
தெளிவுபடுத்துகின்றது.
நாளை-எதிர்காலத்தில்
தமிழர் பண்பாடு எப்படி
இருக்கும் எனக்
கணிக்கின்றது. |