தன் மதிப்பீடு : விடைகள் - I
3. | வல்வில் ஓரியின் காடு பரணர் கற்பனையில் உவமையாகும் திறத்தை எடுத்துக் காட்டுக. |
தலைவியைச் சந்திக்க உதவுமாறு தோழியை வேண்டும் தலைவன் தலைவியை ஆர்வமாக வருணிக்கும்போது தலைவியின் கூந்தல் வல்வில் ஓரியின் காடுபோல மணக்கிறது என்று கூறுகிறான். பரணர் புறப்பொருள் தகவல்களை அகப்பாட்டில் திறமையாக இணைப்பவர். இவ்வுவமை அதற்குச் சான்றாகிறது. |