நற்றிணை - பாடப்பகுதி இரண்டாவது 10 பாடல்களின் திணை - கூற்று விளக்கங்கள், ஆசிரியர் பற்றிய குறிப்பு, பாடல் பொருள் விளக்கம் ஆகியவை தரப்பட்டுள்ளன.
பாடல்களில் இடம்பெறும் திருக்குறள் கருத்து, சிலப்பதிகாரத்துடன் ஒப்புமையுள்ள கருத்து ஆகியவை சுட்டிக் காட்டப்பட்டுள்ளன.
இற்செறிப்பு, வரைவுகடாதல், தலைவி ஆற்றாமை போன்ற துறை அமைந்த பாடல்களில் கவிஞர்கள் காட்டும் உணர்ச்சிப் பெருக்கு சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
இப்பாடல்களில் கவிஞர்கள் உருவாக்கியுள்ள காட்சி அமைப்புகளும் படிமக் காட்சிகளும் எடுத்து விளக்கப்பட்டுள்ளன.
காதல் உணர்வு - அதனால் ஏற்படும் துயரம் மிகுந்துவிடும்போது ‘காமம் மிக்க கழிபடர்கிளவி’ வெளிப்படுகிறது என்பதை ஒரு பாடலில் காணலாம்.
பாட அமைப்பு