தன் மதிப்பீடு : விடைகள் - I

3. ‘கானம் காரெனக் கூறினும் யானோ தேறேன்’ - யார் கூற்று? விளக்குக.

தலைவன் தான் வருவதாகக் குறித்த கார்காலம் வந்தும் அவன் வரவில்லை. தலைவி வருந்துவாளோ எனத் தோழி கவலை கொள்கிறாள். அதனைக் குறிப்பாக உணர்ந்த தலைவி மேற்கண்டவாறு சொல்கிறாள். ‘கார்காலம் வந்துவிட்டது’ எனக் கொன்றைப் பூக்களைக் காட்டி இந்தக் காடு சொல்கிறது; ஆனால் நான் நம்பமாட்டேன். என் தலைவர் பொய் சொல்ல மாட்டார்’ எனத் தான் தலைவன்மீது கொண்டிருக்கும் நம்பிக்கையைத் தலைவி வெளிப்படுத்துகிறாள்.