தன் மதிப்பீடு : விடைகள் - I

4. பசலை உணீஇயர் வேண்டும் - பசலை எதனை உண்கிறது?

வெள்ளிவீதியார் பாடலில் தலைவனைப் பிரிந்திருக்கும் தலைவியின் கூற்று இது. தன் அழகு தனக்கும் பயன்படாமல் தலைவனுக்கும் பயன்படாமல் பசலைநோயால் உண்ணப்படுகிறது என அவள் வருந்துகிறாள். உண்ணப்படுகிறது என்பதற்கு அவள் அழகு நோயினால் மறைக்கப்படுகிறது என்பது பொருள். பசலை: பிரிவினால் ஏற்படும் நிறமாற்றம்.