குறுந்தொகை
பற்றிய இந்தப் பாடப்பகுதியில்
இரண்டாவது 13 பாடல்களின் உள்ளடக்கம்,
உத்திகள்,
உருவமைப்பு ஆகியன விளக்கப்படுகின்றன.
பல சங்க இலக்கியப்
பாடல்களில் காணப்படுவது
போலவே, இப்பாடப்பகுதிப்
பாடல்களிலும்
இயற்கை-மானிட வாழ்வு ஒன்றிப்பு
காணப்படுவதை இப்பாடம் சுட்டிக் காட்டுகிறது.
பிரிவு
வேதனை தலைவனுக்கும் உண்டு என்பதை
இப்பாடப் பகுதிப் பாடல்கள் சில உணர்த்துகின்றன.
மனித
இயல்புகள் மாற்றமடையும்போது,
‘அன்றும் - இன்றும்’ என ஒப்பிட்டுப்
பார்ப்பது
தவிர்க்க முடியாதது. இரண்டு பாடல்களில்
இந்த
ஒப்பீடு நிகழ்வதை இப்பாடம் எடுத்துக்காட்டுகிறது.
இந்தப் பாடத்தைப்
படிப்பதால் என்ன பயன் பெறலாம்?
ஓர் அழகிய, இனிய, இளைய குடும்பக்
காட்சியை இப்பாடத்தில் நீங்கள் கண்டு மகிழலாம்.
சங்க இலக்கியம் முழுவதும் பேச்சுகளால் ஆனது.
அவற்றுள் நாம் எதிர்பார்க்காத பேச்சுகளும் உண்டு. தலைவன்
ஒருவன் தான் கண்ட கனவை நோக்கிப் பேசும் தனித்தன்மையான
ஒரு பேச்சை இப்பாடப் பகுதியில் நீங்கள் கண்டுசுவைக்கலாம்.
காக்கை
கரைந்தால் விருந்தினர் வருவர் எனும் நம்பிக்கை சங்கப்
பாட்டில் காதல் நிகழ்ச்சி ஒன்றைச் சிறப்பிக்கப் பயன்பட்டிருக்கும்
அழகை உணர்ந்து சுவைக்கலாம்.
நீங்கள் கவிதை படைப்பவராகவோ
படைக்க விரும்புகிறவராகவோ இருந்தால் நீங்கள் முன்மாதிரியாகக்
கொள்ளத்தக்க பாடல் வடிவமைப்புகளை இப்பாடப் பகுதியில்
காணலாம்.