தன் மதிப்பீடு : விடைகள் - I


3.

பாம்பு வெகுண்டன்ன தேறல் - இவ்வடியில் இடம் பெற்றுள்ள உவமையை விளக்குக.

பாணர்களுக்கு விருந்தோம்புவதில் சிறந்தவன் நல்லியக்கோடன். இவன் பாணர்களுக்கு உணவுடன் நல்ல தேறலையும் (கள்) கொடுத்துக் குடிக்கச் செய்தான். இத்தேறலை உண்ட பாணர்களுக்குப் போதை மயக்கம் உண்டாயிற்று. இது பாம்பு கடித்த உடன் அதன் நஞ்சு தலைக்கு ஏறி மயக்குவது போன்று இருந்ததாம். இதனை, “பாம்பு வெகுண்டன்ன தேறல்” என்று நத்தத்தனார் கூறுவதன் மூலம் அறியலாம். இது தேறல் உண்டதன் பயன். ஆதலால் இது பயன் உவமம் ஆயிற்று.

முன்