| 
						   அகத்திணைகள் மொத்தம் ஏழு; எனினும் அவற்றை
								 இலக்கண நூலார் மூன்று பிரிவுகளில் அடக்கிக் காட்டுவர். அவையாவன :
						  
							
								- கைக்கிளை
 
								- ஐந்திணை
 
								- பெருந்திணை
 
						  
						 
						 இம் மூன்றே எண்ணிக்கை 
								 அடிப்படையில் கூறும் போது
								  
								 
								 
										கைக்கிளை - 1 
										ஐந்திணை - 5 
										பெருந்திணை - 1 
										என 7 பிரிவுகளாகிறது.
								 	
						 
            மலர்தலை உலகத்துப் புலவோர் 
              ஆய்ந்த  
              அருந்தமிழ் அகப்பொருள், கைக்கிளை, ஐந்திணை 
              பெருந்திணை எனஎழு பெற்றித்து ஆகும் (1) 
 
 
 என்பது நம்பியகப் பொருள் நூற்பா!  
  அகப்பொருள் சொல்லப்படும் முறை
									
 அகத்திணை ஏழினையும் புனைந்துரை, உலகியல் எனும்
								 இரு முறைகளில் கூறலாம்.
								  
 
									 
										புனைந்துரை
											 
						 
			 			 புனைந்துரை என்பது நாடகப் பாங்குடையது. புலவர்
								தாமே கற்பனையாகப் படைத்து மொழிவது. 
						 
									உலகியல்
								
						 
						 
            உலகியல் 
              என்பது உண்மைத் தன்மை உடையது. இயல்பாக, உலகில் நடப்பதை உள்ளவாறே உரைப்பது. 
			
						 |