| 
						 									
										 ஐந்திணைகளுக்கும் 
                      உரிய உரிப்பொருள்களைக் கீழ்க்காணுமாறு வகுத்துள்ளனர்.  
										
											குறிஞ்சிக்குரியது
									
										 புணர்தலும், அதன் நிமித்தமும்
										 
										 
										
											பாலைக்குரியது
										
										 பிரிதலும், அதன் நிமித்தமும்
										 
										 
										
												முல்லைக்குரியது
										
										இருத்தலும், அதன் நிமித்தமும்
										 
										 
										
											மருதத்துக்குரியது
										
										
										ஊடலும், அதன் நிமித்தமும்
										 
										 
										
											நெய்தலுக்குரியது
										
										இரங்கலும், அதன் நிமித்தமும் சொற்பொருள் விளக்கம்
										 
										 
										
											புணர்தல்
										
										தலைவனும் தலைவியும் கூடுதல்.
										 
										 
											பிரிதல்
										
										
										
                    தலைவன், 
                      யாதேனும் ஒரு காரணமாகத் தலைவியை விட்டுப் பிரிந்து செல்லுதல். 
                     
										 
											இருத்தல்
										
										
										தலைவி, தலைவனது பிரிவைப் பொறுத்துக் கொண்டு இருத்தல்.
										 
										 
										
											ஊடல்
								
										தலைவி, யாதேனும் ஒரு காரணம் கருதித் தலைவன் மீது கோபப்படுதல்.
										 
										 
										
											இரங்கல்
										
										
										தலைவி, தலைவனது பிரிவைத் தாங்க இயலாது வருந்துதல்.
										 
										 
										
											நிமித்தம்
										
										 நிமித்தம் என்றால் அந்த ஒழுக்கம் தொடர்பான முன்/ பின் செயல்பாடுகள் என்று பொருள்.
										 
													 
										  |