3.0 பாட முன்னுரை

நம்பியகப் பொருள் என்னும் இலக்கண நூலின் முதல் இயல் அகத்திணை இயல் ஆகும். அந்த இயலின் இரண்டாம் பிரிவாக இப்பாடப் பகுதி அமைகிறது. இப்பாடப் பகுப்பில்,

  • களவு, கற்பு எனும் இரு கைகோள்கள்
  • களவிலும், கற்பிலும் நிகழும் புணர்ச்சிகள்
  • அறத்தொடு நிற்றலும், வரைவும்
  • களவிலும், கற்பிலும் நிகழும் பிரிவுகள்
  • ஊடலும், அதைப் போக்கும் வாயில்களும் பற்றிய செய்திகள்
  • துறவறம்

முதலான செய்திகள் இடம் பெறுகின்றன. இச்செய்திகளை அகத்திணை இயலின் 26 முதல் 116 வரை உள்ள நூற்பாக்களின் வழி அறியலாம்.