தன் மதிப்பீடு : விடைகள்-II
5. துறவறம் பற்றி விளக்குக.

    கற்பு வாழ்வின் முடிவாக - நிறைவாக - பயனாகத் தலைவனும் தலைவியும் மேற்கொள்ளும் துறவறம் பற்றிய நூற்பா கீழ் வருமாறு :-

மக்கெளாடு மகிழ்ந்து, மனையறம் காத்து, மிக்க காம வேட்கை தீர்ந்துழித் தலைவனும், தலைவியும் தம்பதி நீங்கித் தொலைவில் சுற்றமொடு துறவறம் காப்ப

இதன்படி, 1) மக்களைப் பெற்று மகிழ்தல்.      2) இல்லறத்திலிருந்து ஏனைய அறம் புரிதல்.     3) காம வேட்கையத் தீர்த்துக் கொள்ளுதல்.

    இவை யாவும் நிகழ்த்திய பிறகு தலைமக்கள் தம் ஊரை விட்டு நீங்கி, ஆனால் சுற்றத்தினரை விட்டு நீங்காமல் மேற்கொள்ளும் பற்றற்ற வாழ்வே துறவறம் ஆகும்.

முன்