பாடம் - 4
D02144 பொதுவியல் திணை

இந்தப் பாடம் என்ன சொல்கிறது?

வெட்சி, கரந்தை, வஞ்சி, காஞ்சி, நொச்சி, உழிஞை, தும்பை, வாகை, பாடாண் என்ற ஒன்பது புறத்திணைகளிலும் கூறப்படாமல் எஞ்சி இருக்கும் செய்திகளைத் தொகுத்துக் கூறும் பொதுவியல் திணை பற்றி விளக்குகிறது.

இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?

  • மூவேந்தர்களுக்குரிய அடையாளப் பூக்களின் சிறப்பினை அறிந்து கொள்ளலாம்.
  • வீரர்களின் வெற்றியை மக்கள் கொண்டாடும் நிலையைத் தெரிந்து கொள்ளலாம்.
  • வீரச்செயல் புரிந்து போர்க்களத்தில் இறந்துபட்ட வீரர்களுக்கு எடுக்கப்படும் நடுகல் பற்றிய செய்திகளைத் தெரிந்துகொள்ளலாம். தமிழகத்தில் இன்று கிடைக்கும் பல நடுகற்கள் இந்தப் போர் மரபை ஒட்டி எழுந்தவை என்பதை இதன்மூலம் உணரமுடியும்.
  • போரிலும் வாழ்விலும் கணவனும் மனைவியும் ஒருவரை மற்றொருவர் இழந்த நிலையில் பல்வேறு நிலைகளில் துன்புறுவதை அறிந்து, போர்ச் சமூகத்தில் எப்படிப்பட்ட நிலைமைகள் உருவாகின்றன என்பதைத் தெரிந்து கொள்ளலாம். கைம்மை, உடன்கட்டை போன்ற நிலைப் பாடுகள் பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.
  • நிலையாமையை இப்பொழுதைவிட அன்றைய போர்ச் சமூகம் நன்கு உணர்ந்திருந்த காரணத்தால், அது மேற்கொண்ட ஈகை முதலான உறுதிப்பொருள்கள் குறித்து அறிந்துகொள்ளலாம்.
  • பெண்ணையும் ஆணையும் பிரிக்கும் போரின் மறுபக்கமான ஆண்பெண் உறவுநிலையின் இல்லறச் சிறப்பையும் அறிந்து கொள்ளலாம்.

பாட அமைப்பு