2.5 வஞ்சிப்பாவின்
வகைகள்
இதுவரை நீங்கள் படித்து வந்துள்ள பாக்கள் பல்வேறு
அடிப்படைகளில் வகைப்படுத்தப்பட்டுள்ளதை அறிவீர்கள்.
அடிகளின் எண்ணிக்கை கொண்டோ, ஈற்றயலடியின் தன்மை கொண்டோ, பாவில் இடம் பெறும்
உறுப்புகளைக் கொண்டோ வகைப்படுத்தப் பெற்றன. வஞ்சிப்பா பாவுக்குரிய அடியை
அடிப்படையாகக் கொண்டு வகைப்படுத்தப் படுகின்றது. அது குறளடி வஞ்சிப்பா, சிந்தடி
வஞ்சிப்பா என இருவகைப்படும்.
2.5.1 குறளடி வஞ்சிப்பா
குறளடிகளால் அமைந்து, தனிச்சொல்லும் ஆசிரியச் சுரிதகமும்
கொண்டு முடிவது குறளடி வஞ்சிப்பா ஆகும்.
2.5.2 சிந்தடி வஞ்சிப்பா
சிந்தடிகளால் அமைந்து, தனிச்சொல்லும் ஆசிரியச்
சுரிதகமும் கொண்டு முடிவது சிந்தடி வஞ்சிப்பா.
|