|
4.0 பாட
முன்னுரை
பாக்களின் வகைகள் பற்றியும் இனங்கள் பற்றியும்
முந்தைய பாடங்களில் பார்த்தோம். வெண்பா, ஆசிரியப்பா ஆகியவற்றின் இனங்கள்
குறித்த இலக்கணங்களைச் சென்ற பாடத்தில் (D03123) அறிந்து கொண்டோம்.
இந்தப் பாடத்தில் கலிப்பாவுக்கும் வஞ்சிப்பாவுக்கும் உரிய இனங்களின் இலக்கணங்களை
அறிந்து கொள்ளலாம். பாடத்தின் நுழைவாசலில் இரண்டு கருத்துகளை மீண்டும்நினைவுக்குக்
கொண்டு வந்து நிறுத்தி வைப்போம்.
(1) இனங்கள் என்பன குறிப்பிட்ட பா இலக்கணத்துடன்
முழுமையும் பொருந்தி வருவன அல்ல;மேலோட்டமான சில
ஒற்றுமைகளை மட்டுமே கொண்டவை.
(2) ஒவ்வொரு பாவும் தாழிசை, துறை, விருத்தம் என
மூன்று இனங்களைக் கொண்டிருக்கும்.
|