4.0 பாட முன்னுரை அணியிலக்கண நூலாகிய தண்டியலங்காரம் பொதுவணியியல், பொருளணியியல், சொல்லணியியல் என்னும் முப்பெரும் பிரிவுகளைக் கொண்டுள்ளது. பொதுவணியியல் செய்யுள் வகைகளையும், காப்பிய இலக்கணத்தையும், செய்யுள் நெறிகளையும் பற்றி விளக்குகின்றது. செய்யுள் நெறி குறித்தும், அதன் வகைகளைக் குறித்தும், வைதருப்ப நெறியின் முதல் ஐந்து குணப்பாங்குகளைக் குறித்தும் இந்தப் பாடத்தில் காண்போம். |