1.0 பாட முன்னுரை

    தமிழ் எழுத்துகளின் எண்ணிக்கையில் என்னென்ன மாற்றங்கள் ஏற்பட்டன என்பது பற்றி வரலாற்றின் (நூற்றாண்டுகள்) அடிப்படையில் காணலாம். அவற்றோடு, இந்த மாற்றங்களுக்கு மிக முக்கியமான காரணங்களாகிய எழுத்துக்கும் மொழிக்கும் உள்ள உறவு, எழுத்துக்கும் ஒலிக்கும் உள்ள உறவு முதலியவற்றையும் காணலாம். தமிழின் ஒலிவளம், பயன்படுத்துவோர்களை ஒட்டி அந்த எண்ணிக்கை மாறுபடும் முறை ஆகியவற்றையும் பார்க்கலாம்.