2.2 காலப்பகுப்பு

    தமிழில் நமக்குக் கிடைக்கப் பெற்ற மிகப் பழந்தமிழ் இலக்கணம் தொல்காப்பியம் ஆகும். அதோடு மட்டும் அல்லாமல் இந்நூல் முதன் முதலில் கிடைக்கப்பெற்ற ஒரு தமிழ் நூல் ஆகும். இந்நூலுடன் சேர்ந்து ஏனைய சங்க இலக்கியங்கள் (பத்துப்பாட்டு, எட்டுத்தொகை) தோன்றிய காலத்தைச் சங்க காலம் என்றும், சங்க காலத்தைத் தொடர்ந்து பின்னர்த் தோன்றிய நூல்களுடன் கி.பி. 17ஆம் நூற்றாண்டு வரை எழுந்த நூல்களின் காலத்தை இடைக்காலம் என்றும், பின்பு அதிலிருந்து இன்றுவரை உள்ள காலத்தைத் தற்காலம் என்றும் மூன்று பெரும்பிரிவுகளாகப் பிரித்து எழுத்துகளின் வருகை வரலாறு விளக்கப்படுகிறது.